ரியாலிட்டி ஷோவில் விபத்து: ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் உள்பட10 பேர் பலி!

ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பு  நடுவானில் நடந்த போது ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அர்ஜென்டினாவில் ...

ரியாலிட்டி ஷோ படப்பிடிப்பு  நடுவானில் நடந்த போது ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அர்ஜென்டினாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அர்ஜென்டினாவில் பிரான்சை சேர்ந்த ஒரு தனியார் டி.வி. ஒன்று பிரபலங்களை வைத்து ஒரு ரியாலிட்டி ‘ஷோ’ காட்சியை படம் பிடித்தது. அதற்காக  ஹெலிகாப்டரில் பறக்கும் பிரபலங்கள் அதில் பறந்த படியே தரையில் இருக்கும் தங்களது தங்குமிடம் மற்றும் உணவு பொருட்களைப்  படம் பிடிக்க வேண்டும்.
அக்காட்சி அர்ஜென்டினாவில் வடமேற்கில் உள்ள லாரி ரியோஜா மாகாணத்தின்  மலைப்பகுதியில் நடந்தது. இதில் பிரான்ஸ் நாட்டின் விளையாட்டு வீரர்கள் உள்பட 8 பேர் கலந்து கொண்டனர்.

இவர்கள் 2 ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர். இவர்களது
ஹெலிகாப்டர்கள் வில்லா கேஸ்டெல்லி என்ற இடத்தில் சென்ற போது 2 ஹெலிகாப்டர்களும் ஒன்றையொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

இதனால் தரையில் விழுந்து அவை நொறுங்கின. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 10 பேர் பலியாகினர்.

அவர்களில் 3 பேர் பிரான்சின் பிரபலமான விளையாட்டு வீரர்கள். புளோரன்ஸ் ஆர்தாயுட் பாய்மர படகு வீராங்கனை ஒருவரும் ஆவார். மற்றொருவர் காமில் முபாத். இவர் ஒலிம்பிக் நீச்சல் வீரர்.

இன்னொருவர் அலெசிஸ் வாஸ்டின். ஓலிம்பிக் குத்துச்சண்டை வீரர். இவர்கள் தவிர மேலும் 5 பேர் பிரான்சை சேர்ந்தவர்கள். இந்த தகவலை பிரான்ஸ் அதிபர் பிரான்கோயில் ஹோலண்டே உறுதி செய்தார்.

விபத்தில் பலியான நீச்சல் வீரர் காமில் முபாத் 2012–ம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 3 பதக்கம் வென்றவர். அலெசிஸ் 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது

Related

விபத்தில் துண்டான வாலிபரின் தலையை ஒட்ட வைத்து உயிர் பிழைக்கச் செய்த இந்திய டாக்டர்!

பிரிட்டனில், கார் விபத்தில் துண்டான வாலிபரின் தலையை ஒட்ட வைத்து, அவரை உயிர் பிழைக்கச் செய்துள்ளார், இந்திய டாக்டர் ஆனந்த் காமத். பிரிட்டனின் நியூகேசில் நகரைச் சேர்ந்தவர், டோனி கோவான். கடந்தாண்டு செப...

ஈராக் மற்றும் சிரியாவின் இறுதி எல்லைக் கடவையும் இஸ்லாமிய அரசிடம் வீழ்ந்தது

ஈராக்கிலும் ,சிரியாவிலும் போராடிவருகின்ற இஸ்லாமிய அரசு இயக்கம் ஈராக் – சிரியா ஆகிய நாடுகளின் இறுதி எல்லைக் கடவையையும் கைபற்றியுள்ளது சிரியா ,ஈராக்  அரசாங்களின் வசம் இருந்தஇறுதி எல்லைக் கடவையான...

பாகிஸ்தானிடம் இருந்து ஓராண்டுக்குள் அணுகுண்டு வாங்க ஐ.எஸ். தீவிரவாதிகள் அதிரடி திட்டம்

அல்கொய்தா தீவிரவாதிகளை விட கொடியவர்கள் என அமெரிக்காவையே அலற வைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், சிரியாவிலும், ஈராக்கிலும் தங்களது எல்லையை விரிவுபடுத்தி வருகின்றனர். இந்த தீவிரவாதிகள் அமெரிக்காவிடம...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item