எஜமானின் தாயை கொன்று தின்ற கொடூர நாய்!
தன்னை வளர்த்த எஜமானின் தாயை கொன்று தின்றுள்ளது ஒரு கொடூர நாய். இது, நாய் வளர்ப்போரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரோமானியாவி...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_390.html

தன்னை வளர்த்த எஜமானின் தாயை கொன்று தின்றுள்ளது ஒரு கொடூர நாய். இது, நாய் வளர்ப்போரிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரோமானியாவில், பிட் புல் இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்று தன்னை வளர்த்த எஜமானரின் தாயைக் கொன்று உயிருடன் தின்றுள்ள சம்பவம் அப்பகுதியில் நாய் வளர்ப்பவர்களிடம் பேரச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ரோமானியாவின் ட்ரொபெடா டுர்னு செவெரின் பகுதி மக்கள் தங்கள் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் எமிலா மிட்ராய், வீட்டின் பின்புறம் உடலில் தலை மற்றும் வலது கை இல்லாத நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அவருக்கு அருகே சங்கிலியால் கட்டப்பட்டிருந்த ஒரு நாய், எமிலாவின் உடலை கடித்துத் தின்றபடி இருந்துள்ளது.
உடனே அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீசுக்கு புகார் அளித்திருக்கின்றனர். புகாரை பெற்று கொண்ட போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, துப்பாக்கி மூலம் அந்த நாய்க்கு மயக்க மருந்தைச் செலுத்தி எமிலாவின் உடலை மீட்டிருக்கின்றனர்.
மேலும், போலீசார் நடத்திய விசாரணையில், எமிலாவின் 35 வயது மகன் ஸ்டீபன் மிட்ராய், தனது வீட்டின் பாதுகாப்பிற்காக அந்த நாயை வளர்த்திருப்பதும், இனக்கலப்பு செய்யப்பட்ட பிட்புல் வகையைச் சேர்ந்த அந்த நாய் மூர்க்கத்தனமான குணம் கொண்டது என்றும் தெரிய வந்திருக்கிறது.
அந்த நாயின் மூர்க்ககுணத்தை அறிந்த என் அம்மா எப்போதும் நாயை விட்டு விலகியே தான் இருப்பார். ஆனாலும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்று தெரியவில்லை என்று ஸ்டீபன் மிட்ராய் கதறி அழுதிருக்கிறார். தற்போது ஸ்டீபன் மீது, நாயை கட்டுப்பாடில் வைக்காத குற்றத்திற்காக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள நாய் வளர்ப்போர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate