அணிசேரா கொள்கையையே கடைப்பிடிப்போம்! - பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளரிடம் மைத்திரி
அ ணிசேரா நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் புதிய அரசின் வெளிநாட்டு கொள்கை என ஜனாதிபதி மைத்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_362.html
.jpg)
அணிசேரா நாடுகள் உட்பட அனைத்து நாடுகளுடனும் இணைந்து ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் புதிய அரசின் வெளிநாட்டு கொள்கை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரிட்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டு பாதுகாப்பு செயலாளர் மைக்கல் ஃபலோனை நேற்று சந்தித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
பொதுநலவாய தின விழாவில் கலந்து கொள்வதற்காக பிரிட்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான இலங்கை அரச குழுவினர், இலங்கை நேரப்படி நேற்றுமாலை 5 மணிக்கு அந்நாட்டு பாதுகாப்பு செயலாளரை சந்தித்துள்ளார். மனித உரிமைகள் பேரவையில் பிரிட்டனின் ஆதரவு இலங்கைக்கு அவசியமானது என ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு, கிழக்கில் மக்களுக்காக தற்போதைய அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமது பாராட்டுகளைத் தெரிவித்த பிரிட்டன் வெளிவிவகார செயலாளர், இலங்கையின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பிரிட்டன் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என உறுதியளித்துள்ளார். சீனா, இந்தியா போன்ற நாடுகளுடனான இலங்கையின் உறவு தொடர்பில் பிரிட்டனின் பாதுகாப்பு செயலாளர் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் வினவியுள்ளார். குறித்த நாடுகளுடன் தமது அரசு புரிந்துணர்வுடன் செயற்படுத்துவதாக இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் ஜனாதிபதியுடன் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், பிரித்தானியாவுக்கான பதில் உயர்ஸ்தானிகர் சானக தல்பகேவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
.jpg)


Sri Lanka Rupee Exchange Rate