மஹிந்தவை போல் மக்களை ஏமாற்றும் மைத்திரி! வெடிக்கும் சர்ச்சை
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் மீறப்பட்டு விட்டன. அமைச்சரவை எண்ணிக்கையினை அதிகரித்து, தேசிய ...


சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பலர் அரசாங்கத்துடன் கைகோர்த்த பின் நிமல் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சி தலைவராவாரா எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியது.
இது குறித்து கட்சியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க கருத்து வெளியிடுகையில்,
மைத்திரிபால சிறிசேனவை நம்பி அவரை ஜனாதிபதியாக்கிய பொது மக்களை ஏமாற்றி விட்டு மீண்டும் ஊழல் அரசாங்கத்தை அவர் உருவாக்கிவிட்டார். இன்று அமைச்சரவையின் எண்ணிக்கை 77 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று உருவாகியிருப்பது தேசிய அரசு என்று சொல்கின்றனர். ஆனால் தேசிய அரசாங்கம் தமது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறிவிட்டது. இனிமேல் இவர்களை தேசிய அரசாங்கம் என கூற முடியாது. இவ்வாறு ஒரு அரசாங்கத்தை நடத்த மக்கள் ஆதரவு தெரிவிக்கவில்லை, மக்கள் விரும்பவும் இல்லை.
ஏனவே அரசாங்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி பாராளுமன்றத்தினை கலைத்து பாராளுமன்ற தேர்தலின் மூலம் புதிய பாராளுமன்றத்தினை அமைக்க வேண்டும்.
அதேபோல் தேசிய நிறைவேற்று சபையில் நாம் அங்கம் வகிக்கின்றோம். தேசிய நிறைவேற்று சபையின் மூலம் பல விடயங்களை வெளிக்கொண்டு வந்துள்ளோம். ஆனால் நாம் தேசிய அரசில் அங்கம் வகிக்கவில்லை. ஆனால் இன்று அரசாங்கத்தின் செயற்பாட்டில் எமக்கு திருப்தி இல்லை. தொடர்ந்தும் தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகிப்பது தொடர்பில் நாம் தீர்மானமெடுப்போம். அதே போல் இவ் தேசிய நிறைவேற்று சபை தொடர்ந்து நீடிக்கப் போவது இல்லை. எனவே அவசியமில்லாதவிடத்து நாம் வெளியேறுவதே சிறந்த முடிவு.
பாராளுமன்றின் எதிர்க்கட்சி யார்? தேசிய அரசாங்கம் ஆளும் தரப்பு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சி என்று சென்றார்கள். ஆனால் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேசிய அரசில் இணைந்து விட்டது.
பாரளுமன்றம் கூடும் இதில் நிமல் சிறிபாலடி சில்வா எங்கு அமர்வார். அவர் எதிர்க்கட்சியா அல்லது ஆளும் கட்சியா என்பதை தெரிவிக்க வேண்டும். பாராளுமன்றத்தினை விளையாட்டு மைதானமாக்கிவிடக் கூடாது. எதிர்கட்சிக்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. அதை இவர்கள் சரியாக செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.