ஐ.தே.க கைவிட்டால் நாங்கள் அரசமைப்போம்: நிமல் சிறிபால
ஏப்ரல் 23ம் திகதியுடன் பாரளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய தேசிய கட்சி உறுதியாக இருப்பதாக தெரிவித்து வரும் நிலையில், அவ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_662.html
ஏப்ரல் 23ம் திகதியுடன் பாரளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய தேசிய கட்சி உறுதியாக இருப்பதாக தெரிவித்து வரும் நிலையில், அவ்வாறான சூழ்நிலை ஏற்பட்டு ஐக்கிய தேசிய கட்சி விலகினால் தமது கட்சி ஆட்சியமைக்க தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் நிமில் சிறிபால டிசில்வாஃ
ஜனாதிபதி தலைமையில் கூடிய ஐமசுமு நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்திருப்பினும் ஜனாதிபதி இது தொடர்பில் தனது நிலைப்பாடு எதையும் அறிவிக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 100 நாள் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஏப்ரல் 23ம் திகதியோடு பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடாக இருப்பினும் தேர்தல் முறை மற்றும் அரசியல் யாப்பு மாற்றங்கள் யாவும் ஒரே நேரத்தில் இடம்பெற வேண்டும் எனவும் அது வரை புதிய தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் கோரும் சு.க அவ்வரசாங்கத்தில் தமது கட்சிக்கும் பெருந்தொகை அமைச்சுப் பதவிகளை கோரியிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.



Sri Lanka Rupee Exchange Rate