வெல்லவாய: பௌத்த துறவி மீது தாக்குதல்; ஈரானியர் கைது!
வெல்லவாய கரன்தகொல்ல விஹாரையின் பௌத்த துறவி மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் அப்பகுதியில் உமா ஓயா வேலைத்திட்டத்தில் பணி புர...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_330.html
வெல்லவாய கரன்தகொல்ல விஹாரையின் பௌத்த துறவி மீது தாக்குதல் நடாத்திய குற்றச்சாட்டில் அப்பகுதியில் உமா ஓயா வேலைத்திட்டத்தில் பணி புரியும் ஈரானிய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்றிருக்கும் இச்சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, குறித்த பகுதியில் உமா ஓயா வேலைத்திட்டத்தின் பகுதியாக அங்கு ஓடையில் பவுசர் இறக்கப்படுவதை பிரதேச மக்கள் எதிர்த்ததனால் உருவான வாதப் பிரதிவாதங்களின் போது குறித்த வேலைத்திட்டத்தில் பணிபுரியும் நான்கு ஈரானியர்கள் அங்கு ஜீப்பில் வந்து அங்கிருந்த துறவி மீது திரவம் (ஸ்ப்ரே) ஒன்றைத் தெளித்ததாகவும் இதனால் தற்போது தனக்குப் பார்வை தெரியவில்லையென குறித்த துறவி தெரிவித்திருப்பதனால் அவர் மொனராகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையிலேயே குறித்த நால்வரில் ஒருவரை பொலிசார் கைது செய்திருப்பதோடு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டுள்ளனர்.



Sri Lanka Rupee Exchange Rate