60 நாட்களுக்குள் கொம்பனித்தெரு மக்களின் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு
கொம்பனித்தெரு மக்களுக்காக அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தில் அரசியல்வாதிகள் மக்களை குழப்பி வேறு விடயத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு ச...
http://kandyskynews.blogspot.com/2015/03/60.html
கொம்பனித்தெரு மக்களுக்காக அமைக்கப்படும் வீட்டுத்திட்டத்தில் அரசியல்வாதிகள் மக்களை குழப்பி வேறு விடயத்திற்கு இந்தப் பிரச்சினையை கொண்டு செல்வதாக குற்றம்சுமத்தப்பட் டுள்ளது.
கடந்த அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு கொம்ப னித்தெருப் பகுதியில் வசித்த மக்களது 470 வீடுகள் உடைக்கப்பட்டன. தொடர்மாடி வீடுகளுக்கான 9 ஏக்கர் காணி சுவீகரிக்கப்பட்டு தொடர்மாடி வீடமைப்புத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆனால் தற்போது இவ் வீடமைப்புக்காக நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட இந்தியா டாட்டா கம்பனியின் அனுமதியை இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு சபை நிறுத்தியமையினால் சகல நிர்மாணப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இவ்விடயமாக அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும். அத்துடன் இம்மக்களது வீட்டுப் பிரச்சினையை தீர்ப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டு 60 நாட்களுக்குள் வீடமைப்புத் திட்டப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்.
இக்குழுவில் அமைச்சின் அதிகாரிகள், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்கள், வீடமைப்பு அமைச்சின் உறுப்பினர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் உறுப்பினர்கள், பிரதேச செயலாளர் உட்பட குழு நியமிக்கப்படும் என்றார். இவ்வீடமைப்புத் திட்டத்தினை நகர அபிவிருத்தி அதிகார சபை உடைக்கும் போது நான் அப்போது எதிர்க்கட்சியில் இருந்து இம்மக்களோடு சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறேன்.
அத்தோடு இந்த மக்களது வாழ்வாதாரப் பிரச்சினைக்காக நீதிமன்றமும் சென்றுள்ளோம். ஆனால் இந்த அமைச்சுக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்க முன்னர் அதிகாரிகள் அம்மக்களது பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.



Sri Lanka Rupee Exchange Rate