பாரிய நிதிமோசடியில் ஈடுபட்ட பசில் ராஜபக்சவின் மனைவி
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவும் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புஸ்பா ராஜப...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_585.html
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஸ்பா ராஜபக்சவும் பாரிய நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
புஸ்பா ராஜபக்சவினால் முன்னெடுக்கப்பட்ட புஸ்பா ராஜபக்ச நிதியத்தின் மூலமே இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவர் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான 150,000 டொலர்களை வைப்புச் செய்திருந்தார் என்ற குற்றச்சாட்டே அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான முறையீடு கோட்டை நீதிவான் முன்னிலையில் பொலிஸாரால் முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து புஸ்பா ராஜபக்சவின் வங்கிக்கணக்கு விபரங்களை பெறுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ச தற்போது அமரிக்காவில் இருந்து வியட்நாமுக்கு சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் அங்கும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நாடாளுமன்றத்தில் பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது


Sri Lanka Rupee Exchange Rate