பஸ்ஸிலிருந்து வெளியே வீசப்பட்ட இளம்தாய் படுகாயம்
கினிகத்தேனை கொத்தலென்ன பகுதியிலிருந்து ஹற்றன் வரை சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த 22 வயதுடைய தாய் ஒருவர் பஸ்ஸி...

கினிகத்தேனை கொத்தலென்ன பகுதியிலிருந்து ஹற்றன் வரை சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த 22 வயதுடைய தாய் ஒருவர் பஸ்ஸிலிருந்து வெளியே வீசப்பட்டு படுகாயங்களுடன் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.பஸ்ஸிலிருந்து இறங்குவதற்கு பெல்லை அடிக்க முயற்சி செய்த போது குறித்த தாய் வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளார்.
இன்று 3 மணியளவில் இந்த விபத்து ஹற்றன்- கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, ரொசல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ரொசல்ல டெம்பள்ஸ்டோவ் பகுதியில் வசிக்கும் சிவாஜி கணேசன் விசித்திரகலா என்ற இந்த இளம்தாயே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
குறித்த தாய் வட்டவளை வைத்தியசாலையில் தனது குழந்தையை பிரசவித்து 16 தினங்களாகிய சிகிச்சையின் பின் இன்று தனது தாயாரோடு வீட்டிற்கு செல்வதற்கு மேற்படி பஸ்ஸில் ஏறியதாகவும் குழந்தையை தனது தாய் கையில் கொடுத்துவிட்டு பஸ்ஸின் முன்னால் ஆசனத்தில் அமர்ந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் ரொசல்ல பகுதியில் இறங்குவதற்கு பெல்லை அடிக்க முற்பட்ட போது குறித்த தாய் வெளியே வீசப்பட்டதாக விசாரணைகளை மேற்கொள்ளும் வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி பஸ் வேகமாக சென்றதாலையே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் வட்டவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபரான சாரதிக்கு எதிராக ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்




.