விரைவில் நாடு திரும்புவேன்: பஸில்
விரைவில் நாடு திரும்பவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று தெரிவித்தார். தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொ...


தனக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்காகவே நாடு திரும்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரிபால சிறிசேன வெற்றி பெற்றதினை அடுத்து தனது மனைவி புஷ்பா ராஜபக்ஷவுடன் முன்னாள் அமைச்சர் பசில் அமெரிக்கா சென்றார்.
இந்த நிலையில் அவருக்கு எதிராக பல குற்றசாட்டுக்கள் சுமத்தப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையிலேயே அவர் நாடு திரும்பவுள்ளதாக அறிவித்துள்ளார்.