கொரில்லாக்களிடம் இருந்தே எச்.ஐ.வி. பரவியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!
மனிதனுக்கு எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. வைரசின் இரண்டு உட்பிரிவுகள் தென்மேற்கு கேமரூனில் உள்ள கொரில்லாக்களிடம் இருந்து வந்திருப்...

![]()
மனிதனுக்கு எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. வைரசின் இரண்டு உட்பிரிவுகள் தென்மேற்கு கேமரூனில் உள்ள கொரில்லாக்களிடம் இருந்து வந்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் உள்ள சிம்பன்ஸி குரங்குகளிடமிருந்துதான் எச்.ஐ.வி. வைரசின் மற்ற இரண்டு உட்பிரிவுகள் வந்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. தற்போது கேமரூனில் உள்ள கொரில்லா குரங்குகளிடமிருந்து பரவியிருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
|
மேலும், ஆராய்ச்சியை மேற்கொண்ட பிரான்ஸின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தைச் சேர்ந்த மார்டின் பீட்டர்ஸ், இந்த ஆராய்ச்சியில் குரங்கினங்கள்தான் மனிதர்களிடையே பெரிய அளவில் நோய்களை பரப்பும் திறனுள்ள எச்.ஐ.வி. வைரஸ்களின் புகலிடமாக இருப்பது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளார்.
|