அமெரிக்காவுக்கும் போக முடியவில்லை, இங்கேயும் இருக்கமுடியவில்லை! - புலம்புகிறார் கோத்தபாய
தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கோ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_446.html

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றுக்கு கோத்தபாய ராஜபக்ச வழங்கியுள்ள நேர்காணலில், தமிழீழ விடுதலைப் புலிகளைப் போன்றே வேறும் சில தரப்பினரும் எனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். என்னைக் கைது செய்யப் போவதாக சிலர் கூறி வருகின்றனர். இதனால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.
|
நான் எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதில்லை. எந்த அதிகாரத்தைக் கொண்டு என்னைக் கைது செய்யப் போவதாக அரசியல்வாதிகள் எச்சரிக்கை விடுக்கின்றனர். எனக்கு அமெரிக்க குடியுரிமை உள்ளது. எனினும், நான் அங்கு சென்றால் நிச்சயமாக தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்.
அரசாங்கம் பழிவாங்கும் நோக்கில் துரத்தி துரத்தி துன்புறுத்தி வருகின்றது. நான் எந்தக் காலத்திலும் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினராக இருந்ததில்லை. எனினும், தற்போதைய நிலைமைகளைக் கருத்திற் கொண்டு அரசியல் கட்சியொன்றில் அங்கத்துவம் பெற்றுக்கொண்டு அரசியலில் ஈடுபட நேரிடலாம் என தெரிவித்துள்ளார்.
|


Sri Lanka Rupee Exchange Rate