மஹிந்தவின் பாதுகாப்பைக் குறைக்கக் கோருகிறார் சந்திரிகா!
மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கோரியுள்ளார். வெளிநாடு சென்றிருந்த சந்திரிகா நாடு...

மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை குறைக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கோரியுள்ளார். வெளிநாடு சென்றிருந்த சந்திரிகா நாடு திரும்பிய பின்னர், நாட்டின் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளார். குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை பற்றி விசாரித்துள்ளார். மஹிந்தவை பிரதமராக்கும் நோக்கில் நடைபெறும் கூட்டங்கள் குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
|
மஹிந்தவிற்கு அரசாங்கம் எவ்வாறான சலுகைகளை வழங்குகின்றன என்பது குறித்தும் ஆராய்ந்துள்ளார். இதன் போது பெரும் எண்ணிக்கையிலான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மஹிந்தவின் பாதுகாப்பிற்காக கடமையில் அமர்த்தப்பட்டுள்ளதனை தெரிந்து கொண்டார். ஜனாதிபதி செயலகத்திற்கு அழைப்பினை ஏற்படுத்திய அவர் எனக்கு அவ்வளவு பாதுகாப்பு வழங்கப்படவில்லை, மஹிந்தவிற்கு இத்தனை அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பிற்கு வழங்கக் கூடாது என சந்திரிக்கா கூறியுள்ளார்
|