பிரேசிலில் சுற்றுலா பேருந்து 1300 அடி உயரத்தில் இருந்து உருண்டது: 32 பேர் பலி
பிரேசிலில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32 பயணிகள் பலியானார்கள். தெற்கு பிரேசிலில் உள்ள சண்டா கட்டாரினா மாநிலத்தில் ...
http://kandyskynews.blogspot.com/2015/03/1300-32.html

பிரேசிலில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 32 பயணிகள் பலியானார்கள்.
தெற்கு பிரேசிலில் உள்ள சண்டா கட்டாரினா மாநிலத்தில் சுமார் 50 சுற்றுலா பயணிகளுடன் ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் 1300 அடி உயர மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் சரிந்தது. இந்த விபத்தில் சுமார் 32 பேர் பலியானார்கள்.
விபத்து நடைபெற்ற பகுதி மரங்களும், புதர்களும் நிறைந்து காணப்பட்டதால் மீட்பு பணியாளர்கள் சமபவ இடத்திற்கு சென்று அடைவதில் சிக்கல் ஏற்பட்டது. இதற்கிடையே கடின முயற்சியுடன் அப்பகுதிக்கு சென்றடைந்த அவர்கள் 12 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் வேறு எவரும் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தகவல்கள் தெரிவிக்கிறது.
2002-2012-க்கு இடைப்பட்ட காலத்தில் பிரேசிலில் சாலை விபத்துக்களின் எண்ணிக்கை 24 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 43000 பேர் விபத்துக்களினால் அந்நாட்டில் உயிர் இழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே வேகமாக வளர்ந்து வரும் பிரேசிலில் ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் புதிய கார்களும் விற்பனையாகின்றது என்பது குறிப்பிடத்தக்கது


Sri Lanka Rupee Exchange Rate