சந்திரிக்கா கடும் எதிர்ப்பு
எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டமையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க எதிர்த்துள்ளார். அண்மையில் ஸ்ரீலங...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_570.html

எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டமையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க எதிர்த்துள்ளார்.
அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.
இந்த பட்டியலில் எஸ்.பி;. திஸாநயாக்கவின் பெயரும் உள்ளப்பட்டிருந்தது.
எஸ்.பி. திஸாநாயக்க கிராமிய அபிவிருத்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் சந்திரிக்காவை நிர்வாணமாக்கி வீதியில் ஓட விடுவதாக எஸ்.பி. சூளுரைத்திருந்தார்.
மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர இதனைக் கண்டித்து விளம்பரம் ஒன்றிலும் தோன்றியிருந்தார்.
இவ்வாறான ஓர் நிலையில் எஸ்.பி.க்கு அமைச்சர் பதவியை மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் வழங்கியுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate