பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று 66வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று 66வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் திகதி பிற ந்த ரணில் விக்கி ரமசிங்...


கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவரான இவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பட்டதாரியாகவும் 1972ஆம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரி சட்டப் பரீட் சையில் சித்தியடைந்து வழக்கறிஞராகவும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் களனி தேர்தல் தொகுதி பிரதான அமைப்பாளராக 1970ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பின்னர் பியகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டு 1977ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பியகம தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசாங்கத்தில் வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சராக செயற்பட்டதுடன் இளம் வயதில் இளைஞர் அலுவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பதவி வகித்து பின்னர் கல்வி அமைச்சராகவும் பதவியேற்றார்.
1993ஆம் ஆண்டு மே 7ஆம் திகதி இலங்கையின் பிரதமராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க 1994 ஆகஸ்ட் மாதம் 19ஆம் திகதி வரை இருந்ததுடன் 2001 டிசம்பர் 9ஆம் திகதி முதல் 2004 ஏப்ரல் 6ஆம் திகதி வரையும் மீண்டும் பிரதமராக இருந்தார். அதற்கு பின்னர் மீண்டும் 2015 ஜனவரி 8ஆம் திகதி இலங்கையின் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.