ஒருநாள் இந்த உலகமே என் பெயரை தெரிந்து கொள்ளும்!- துணை விமானி கூறியதாக காதலி அதிர்ச்சி தகவல்
ஜேர்மனி விமான விபத்திற்கு காரணமான துணை விமானியின் முன்னாள் காதலி அவர் குறித்து வெளியிட்ட தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_552.html

கடந்த 24ம் திகதி ஜேர்மன்விங்ஸ் என்ற விமானம் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த விமான குழு உள்ளிட்ட 150 பயணிகளும் பரிதாபமாக பலியாகினர்.
இரண்டு நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கறுப்புப் பெட்டியில், துணை விமானியான அன்ட்ரீஸ் லுபிட்ஷ் என்பவர் வேண்டுமென்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்கியமை தெரியவந்தது.
இந்நிலையில் இவரது முன்னாள் காதலி பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில்,
விமான விபத்தை பற்றிய செய்தி தனக்கு பேரிடியாக இருந்தது என்றும் இந்த நிகழ்வு கடந்த ஆண்டில் துணை விமானிக்கும் தனக்கும் நிகழ்ந்த உரையாடலை நினைவு கூர்வதாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய துணை விமானி, தற்போது உள்ள நடைமுறைகளை மாற்றி அமைப்பேன். அன்று இந்த உலகமே தன்னுடைய பெயரை தெரிந்து கொள்ளும் என்றும், அவர்கள் என்னை எப்போதும் நினைவில் வைத்திருப்பார்கள் என கூறியதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் துணை விமானியின் ஒழுங்கற்ற நடத்தையின் காரணமாக அவரை விட்டு பிரிந்து வந்ததாகவும் குறித்த காதலி கூறியுள்ளார்.
இதற்கிடையே தனது மனஅழுத்தம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தால் தனது பணி பறிக்கப்படும் என்ற அச்சத்தில் மருத்துவரின் கடிதத்தை துணை விமானி மறைத்ததாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஜேர்மன் விமானத்தை தகர்த்திருக்கலாம் என்று கூறப்படும் துணை விமானியின் மனநலம் குறித்து எழுப்பப்படும் சந்தேகங்களை லுப்தான்ஸா விமான நிறுவனம் மறுத்துள்ளது.
ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல் குறித்து லுப்தான்ஸா எதையும் தெரிவிக்க முடியாது. அதற்கான போதிய விவரங்கள் இல்லாத நிலையில் இதனை எங்களால் உறுதி செய்ய முடியாது. அவரை பணியில் அமர்த்தியபோது, மேற்கொள்ள வேண்டிய அனைத்துப் பரிசோதனைகளையும் நிறுவனம் மேற்கொண்டது.
மேலும், விமானிகளின் மனநிலை, ஆரோக்கியம் குறித்து கவனம் செலுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாங்கள் ஆலோசிக்கிறோம் என்று ஜேர்மன்விங்ஸ் நிர்வகிக்கும் லுப்தான்ஸா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புபட்ட செய்தி - ஜேர்மன் விமான விபத்து..துணை விமானியின் வீட்டில் சிக்கிய ஆதாரங்கள்! திடுக்கிடும் தகவல்களுடன்


Sri Lanka Rupee Exchange Rate