சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களுடன் இந்திய பிரஜைகள் இருவர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு...

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கட்டுக்களுடன்  இந்திய பிரஜைகள் இருவர் கைது
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை தங்க பிஸ்கட்டுக்களுடன் இந்திய பிரஜைகள் இருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 05 மில்லின் ரூபா பெறுமதிக்கும் அதிகமான தங்க பிஸ்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் , சட்டப் பிரிவு பணிப்பாளர் லெஸ்லி காமினி தெரிவிக்கின்றார்.

சிங்கப்பூரிலிருந்து நேற்று இரவு 9 மணியளவில் நாட்டை வந்தடைந்த விமானத்தில் பயணித்த இந்திய பிரஜைகள் இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

23 மற்றும் 27 வயதான இரண்டு ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேகநபர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் விமான நிலைய சுங்கப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

இலங்கை 3439764091867755927

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item