பொது பல சேனா மகிந்தவை தோற்கடித்த புழுக்கள்!– டிலான் பெரேரா
சுற்றியிருந்த புழுக்களினால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச என்ற பாரிய மரம் விழுந்து விட்டதாக அமைச்சர டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். பது...


பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச என்ற மரம் சுற்றியிருந்த சில புழுக்களினாலே முறிந்து விழுந்தது. பொது பல சேனா புழுக்களை கழுத்தில் போட்டுக்கொண்டது.
அரசாங்கத்தினுள் இருந்துகொண்டு அரசாங்கத்தை பற்றி விமர்சனங்கள் செய்த, பொருளாதார கொலைகாரர்கள் என கூச்சலிட்டவர்கள் புழுக்கள்.
அவ்வாறான புழுக்களினாலே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்துள்ளார் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.