மகிந்த இல்லாத அரசியல் மணமகள் இல்லாத திருமண வீடு போன்றது: உதய கம்மன்பில
மகிந்த ராஜபக்ச இல்லாத அரசியலும், நாடும் மணமகள் இல்லாத திருமண வீடு போன்றது என மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மகி...


மகிந்த இல்லாத அரசியலில் வெளிச்சம் இல்லை, கவர்ச்சி இல்லை, எனவே எமது உயிரைப் பணயம் வைத்தாவது மீண்டும் மகிந்த ராஜபக்சவின் யுகத்தை நாட்டில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
நாம் மேற்கொள்ளும் இந்த செயற்பாட்டை யாராலும் தடுத்து நிறுத்த முடியும், ஆனாலும் பரவாயில்லை நாம் எமது பாதையில் தொடர்ந்து பயணிப்போம்.
தற்பொழுது எழுச்சி பெற்றுள்ள மக்கள் அலைக்கு மைத்திரி அரசாங்கம் பயந்துள்ளது. எனவே தான் தேசிய அரசாங்கத்தை உருவாக்கியுள்ளது எனவும் உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்கு அழைத்து வருவதற்காக மேல் மாகாண சபை உறுப்பினர் பியல் நிஷாந்த டி சில்வாவினால் ஆரம்பிக்கப்பட்ட கருத்தரங்கில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் மோதுவது ரணிலுடனோ அல்லது மைத்திரியுடனோ அல்ல, அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனே. ஏகாதிபத்தியவாதிகள் எங்கள் ஆட்சியை பறித்துக்கொண்டது.
100 நாட்களில் ஆட்சியை திருப்பி தருவதற்கல்ல,தடைகள் இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தாய் நாட்டிற்காக மகிந்த ராஜபக்சவை மீண்டும் அரசியலுக்குள் கொண்டுவருவதற்கான போராட்டத்தில் இணைந்துள்ளனர்.
இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை தோற்கடிப்பது, அக்கட்சி உறுப்பினர்கள் அடி வாங்குவது, அவர்களின் தொழில் பறிபோவது ராஜித போன்ற அமைச்சர்களினாலேயே.
தாய் நாட்டை பாதுகாப்பதற்கும் மகிந்தவை மீண்டும் பிரதமராக்குவதற்கான, இப்போராட்டதில் இணைந்துள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கினால் அது தாய் நாட்டை நேசிக்கிற மக்களை தண்டிப்பது போன்றென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.