உ லகக் கோப்பை போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ஜோடியாக ரோகித்- தவான் ஜோடி 174 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. உலகக் கோப்பை போ...
உலகக் கோப்பை போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ஜோடியாக ரோகித்- தவான் ஜோடி 174 ரன்கள் குவித்து புதிய சாதனை படைத்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் கடந்த 1996ஆம் ஆண்டு கென்ய அணிக்கு எதிராக சச்சின் -அஜய் ஜடேஜா ஜோடி 163 ரன்கள் எடுத்ததுதான் சாதனையாக இருந்தது. இந்த போட்டியில் சச்சின் 110 ரன்களும் அஜய் ஜடேஜா 53 ரன்களும் எடுத்தனர். பல வருடங்களாக இந்த சாதனை முறியடிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் அயர்லாந்து அணிக்கு எதிரான இன்¬றைய போட்டியில் இந்திய வீரர்கள் ஷிகர்தவான்- ரோகித் சர்மா ஜோடி முறிடியத்தது-. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 174 ரன்களை எடுத்து சச்சின்-- ஜடேஜா சாதனையை முறியடித்தது.
இந்த உலக கோப்பை போட்டியில் இதுவரை நடந்த ஆட்டங்களில் ரோகித் -தவான் ஜோடி எடுத்த 174 ரன்கள்தான், முதல் விக்கெட் ஜோடியாக எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் ஆகும். இதற்கு முன்னதாக ஸ்காட்லாந்துக்கு எதிராக இங்கிலாந்தின் மொயின் அலி -இயான் பெல் ஜோடி 172 ரன்களை எடுத்திருந்தனர்.