யாழில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட மகிந்தவின் கட்அவுட்
யாழ்.வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகே இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உருவப்படத்துடனான பெரும் கட்அவுட் நேற்று முன்தினம் இரவோடு இ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_427.html

யாழ்.வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகே இருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உருவப்படத்துடனான பெரும் கட்அவுட் நேற்று முன்தினம் இரவோடு இரவாக அகற்றப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் வீரசிங்கம் மண்டபம் புனரமைக்கப்பட்டு முன்னாள் ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டது.
அதன்போது ஜனாதிபதி மகிந்தவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பெரியளவிலான கட்-அவுட் மண்டபத்துக்கு அருகே நிறுவப்பட்டது.
பின்னர் ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் அதிலிருந்த மகிந்தவின் உருவப்படம் மறைக்கப்பட்டது.அந்த மறைப்பு கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் இனம் தெரியாதவர்களால் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் பிரதமர் ரணில் நேற்று வீரசிங்கம் மண்டபத்துக்கு நேற்று வந்திருந்தார்.
அதற்கு முன்னதாக நேற்று முன்தினம் இரவு மகிந்தவின் கட்-அவுட் முழுமையாக அகற்றப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate