டுபாயில் இருந்து தங்கம் கடத்தியவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்ற ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_703.html

டுபாயில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு தங்கம் கடத்த முயன்ற ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டர்.
இவர் டுபாயில் இருந்து ஒரு கோடியே 33 இலட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களை எடுத்து வந்த வேளையிலேயே விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டர்.
கல்முனையச் சேர்ந்த 29 வயதுடைய நபர் ஒருவரே கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். அதேவேளை கடத்தல் சம்பவத்திற்கு உதவியதாக கூறப்படும் இன்னொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Sri Lanka Rupee Exchange Rate