தினமும் 9 மணிநேரம் தூக்கமா? விரைவில் மரணம் நிச்சயம்- எச்சரிக்கும் ஆய்வு முடிவு
தினமும் 9 மணிநேரத்துக்கும் மேல் தூங்கினால் விரைவில் மரணம் நிச்சயம் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. நீண்ட நேரம் தூங்கும் நப...
http://kandyskynews.blogspot.com/2015/03/9_28.html

நீண்ட நேரம் தூங்கும் நபர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து இங்கிலாந்தை சேர்ந்த அறிவியல் வல்லுநர்கள் ஆய்வு நடத்தினர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக 1 கோடி மக்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவில், ஒருநாளைக்கு 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குபவர்கள் விரைவில் இறப்பதற்கான அபாயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதேபோல் குறுகிய நேரம் தூங்குபவர்களுக்கும் இந்த ஆபத்து உள்ளது. அதாவது 6 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்கள் விரைவாக மரணம் அடைவதற்கான வாய்ப்புகள் 12 சதவீதம் உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.
மேலும் நீண்ட நேரம் தூங்கினால் மன அழுத்தம், இதய பிரச்சினைகள், நீரிழிவு நோய்கள், ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாள் ஒன்றுக்கு இரவு 7 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரை தூங்குவதே நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கும், உடலுக்கும் உகந்த ஒன்று விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


Sri Lanka Rupee Exchange Rate