ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி ; மகிந்தவின் சகாக்கள் அதிரடி நீக்கம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் பல பதவிகளில் அமர்த்தப்பட்ட ஆயிரத்து பதினொரு பேர் பதவிகளில் இருந்த...


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் பல பதவிகளில் அமர்த்தப்பட்ட ஆயிரத்து பதினொரு பேர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

முந்தைய அரசாங்கம் இவர்களுக்கு வீணாக சம்பளத்தையும் சிறப்புரிமைகளையும் வழங்கி பதவிகளில் வைத்திருந்தது.

அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 565 ஆக அதிகரித்திருந்தது. இந்த நிலையில், ஆயிரத்து 11 பேரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவிகளில் இருந்து நீக்கியுள்ளார்.

அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்டிருந்த இவர்களுக்கு சம்பளம், எரிபொருள், வாகனம், தொலைபேசி போன்ற பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டதன் காரணமாக ஜனாதிபதி செயலகத்தின் செலவுகள் அதிகரித்திருந்தன.

இதனால், ஜனாதிபதி தனது ஊழியர்களின் எண்ணிக்கை 554 ஆக குறைந்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி செயலகத்தின் செலவுகளும் பெருமளவில் குறைந்துள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் கூறினார்.

Related

இலங்கை 2142933164261862119

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item