நியூசிலாந்து அணி அபார வெற்றி
வெலிங்க்டனில் இன்று நடைபெற்ற 4-வது காலிறுதி போட்டியில் நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள் அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையி...

வெலிங்க்டனில் இன்று நடைபெற்ற 4-வது காலிறுதி போட்டியில் நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள் அணியை 143 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. நியூசிலாந்து வீரர் கப்தில் 163 பந்துகளில் 237 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார்.
| |
. | |
![]() உலகக்கோப்பைப் போட்களின் 4வது கால் இறுதி போட்டிகள், நியூசிலாந்து அணிக்கும், வெஸ்ட் இன்டிஸ் அணியும் மோதின. இந்தப் போட்டி நியூசிலாந்தின் வெலிங்டனில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக கப்தில்- மெக்கல்லம் களம் இறங்கினார்கள். மெக்கல்லம் 8 பந்தில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 12 ரன்கள் எடுத்த நிலையில் டெய்லர் பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து வில்லியம்சன் களம் இறங்கினார். இருவரும் நிதானமாக விளையாடினார்கள். ஆனால் வில்லியம்சன் 33 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் கப்தில் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அடுத்தடுத்து டைலர் (42 ரன்), ஆன்டர்சன் (15 ரன்), எல்லியாட் (27 ரன்) ஆட்டம் இழந்தனர். ஆனால் நிலைத்து நிதானமாக ஆடிய கப்தில் இரட்டை சதம் அடித்தார். கப்தில் 163 பந்துகளில் 237 ரன் குவித்தார். இதில் 24 பவுண்டரிகளையும், 11 சிக்சர்களையும் விளாசி தள்ளினார். ஒருநாள் போட்டி வரலாற்றில் இரட்டை சதம் அடித்த 5–வது வீரர் கப்தில் ஆவார். கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் முதல் முறையாக இரட்டை சதம் அடித்தார். அவரை தொடர்ந்து ஷேவாக், ரோகித்சர்மா, கிறிஸ்கெய்ல் ஆகியோர் இரட்டை சதம் அடித்து இருந்தனர். இதில் ரோகித்சர்மா இரண்டு முறை இரட்டை சதம் அடித்து உள்ளார். அவர் கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக 264 ரன் குவித்ததே உலக சாதனையாக உள்ளது. கப்தில் இன்று 237 ரன்களை குவித்ததன் மூலம் ரோகித்சர்மாவுக்கு அடித்தப்படியாக 2–வது இடத்தை பிடித்தார். அவர் ஷேவாக்கை (219 ரன்) முந்தினார். உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக வெஸ்ட் இண்டீசை சேர்ந்த கிறிஸ்கெய்ல் திகழ்ந்தார். அவர் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக கடந்த மாதம் 24–ந்தேதி 215 ரன்கள் குவித்தார். இந்த சாதனையை நியூசிலாந்து தொடக்க வீரர் கப்தில் முறியடித்தார். அவர் 237 ரன்களை குவித்தார். உலக கோப்பையில் இரட்டை சதம் அடித்த 2–வது வீரர் கப்தில் ஆவார். மேலும் உலக கோப்பையில், தனி நபராக அதிக ரன் குவித்த முதல் வீரர் போன்ற பெருமையையும் நியூசிலாந்தின் மார்டின் கப்தில் பெற்றார். கப்திலின் அசுர ஆட்டத்தால் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 393 ரன்களை குவித்தது. வெஸ்ட் இன்டீஸ் அணி 394 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடடினமான இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக கெயில், சார்லஸ் களம் இறங்கினர். அணியின் விக்கெட்கள் நியூசிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் சரிந்தன. கெயில் வெறும் 61 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். வெஸ்ட் இண்டீஸ் அணி 30.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது. |