பிரியந்த சிறிசேனவின் மறைவிற்கு பாகிஸ்தான் இரங்கல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்தவின் மறைவிற்கு இலங்கைக்கான பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் டொக்டர் சப்ராஷ் சிப்ரா தனது அனு...

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதருக்கு ஏற்பட்ட சோக முடிவை கண்டு பாகிஸ்தான் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.
அவரின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்த பிரியந்தவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ம் திகதி இரவு ஏற்பட்ட தாக்குதல் சம்பவமொன்றில் ஜனாதிபதியின் இளைய சகோதரர் பிரியந்த சிறிசேன படுகாயமடைந்து, கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்தார்.
பிரியந்த சிறிசேனவின் இறுதி சடங்கு நாளை மாலை 3 மணிக்கு, பொலன்னறுவை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது.