ரணிலுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தும் சம்பிக்க ரணவக்க!
ஏப்ரல் 23ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ச்சியாகக் கருத்து...

http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_370.html

ஏப்ரல் 23ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் தொடர்ச்சியாகக் கருத்து வெளியிட்டுவரும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியால் ஏப்ரல் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ள ஜாதிக ஹெல உறுமய, நாடாளுமன்றத்தைக் கலைக்க முயற்சித்தால் தமது அமைச்சுகளைத் துறந்து தேசிய அரசிலிருந்து விலகவேண்டிய நிலையே ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்படும். அதன் பின்னர் ஏனைய கட்சிகள் இணைந்து ஆட்சியை முன்னெடுக்கும் நிலைமை உள்ளது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைக் குறைத்து, அந்த அதிகாரங்கள் பிரதமரின் கைக்குச் செல்வதற்கு இடமளிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ள ஜாதிக ஹெல உறுமய, பிரதமருக்குரிய தகுதியை ரணில் விக்கிரமசிங்க இழந்து வருகின்றார் என்றும் தெரிவித்துள்ளது. பத்தரமுல்லையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு அக்கட்சி கருத்து வெளியிட்டுள்ளது.
இதன்போது, ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க கருத்துத் தெரிவிக்கையில் - ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரங்களில், நாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அதிகாரங்களே குறைக்கப்படும் என எமது 100 நாள் வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களில் முக்கியமானவற்றை நீக்கியுள்ளோம். இருப்பினும், ஜனாதிபதியின் அதிகாரங்கள் பிரதமரின் கைகளுக்குச் செல்வதற்கு நாம் இணங்கமாட்டோம்.
ஜனாதிபதியும், நாடாளுமன்றமும் இணைந்தே தேசிய அரசு அமையவேண்டும். ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு ஏனைய கட்சிகளும் ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கின்றோம்' - என்றார்.
இதையடுத்து கருத்து வெளியிட்ட கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, பிரதமருக்குரிய தகுதியை ரணில் விக்கிரமசிங்க இழந்து வருகின்றார். தேசிய அரசு எதற்காக நிறுவப்பட்டது என்பதைக் கருத்தில்கொண்டு செயற்படாமல், அடுத்து இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை இலக்குவைத்தே ஐக்கிய தேசியக் கட்சி செயற்படுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி கூறுவதுபோல ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியுமா?
நாடாளுமன்றத்தைக் கலைக்க முயற்சித்தால் ஐக்கிய தேசியக் கட்சி தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்துவிட்டு அரசிலிருந்து வெளியேறவேண்டிய நிலையே ஏற்படும். ஏனெனில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பெரும்பான்மை பலம் இருக்கின்றதால் ஆட்சியைத் தொடரக்கூடிய நிலைமை உள்ளது - என்றார்.