மகிந்தவின் அரசியல் பயணம் உறுதி!- விமல் வீரவன்ச
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் அல்லது புதிய கட்சியின் ஊடாக மீண்டும் அரசியலுக்கு வருவது உறுதி என தேசிய சுதந...


வானொலி ஒன்றிற்கு இன்று காலை வழங்கிய செவ்வியில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நேற்று நாரஹேன்பிட்டியவில் வைத்து ஊடகமொன்றிற்கு தான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஊடாக மாத்திரமே அரசியலுக்கு வருவேன் என தெரிவித்திருந்தார்.
நான் மிக உண்மையாகவும் உறுதியாகவும் தெரிவிக்கிறேன் எங்கள் ஜனாதிபதி நாட்டின் தலைவர் மகிந்த அரசியலுக்கு வருவார், அவர் வரமாட்டார் என நினைத்திருந்தால் நாங்கள் பேரணி நடத்துவதற்கு எங்களுக்கென்ன பைத்தியமா என விமல் வீரவன்ச கேள்வியெழுப்பியுள்ளார்.
பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பெயர் பலகையை பிடித்துக் கொண்டிருப்பவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு இடமளிக்க மாட்டார்கள்.
பொதுத்தேர்தலில் அமைச்சர் பதவிக்கு விருப்பமென்றால் சுதந்திரக் கட்சியில் போட்டியிடுமாறு சிலர் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
மகிந்த அமைச்சர் பதவிக்காக பொதுத்தேர்தலில் போட்டியிட தேவையில்லை. பிரதம வேட்பாளராக சுதந்திரக் கட்சியில் நியமிக்க முடியுமா இல்லையா என்பதனை எங்களுக்கு உறுதியாக தெரிவிக்க வேண்டும்.
எப்படியிருப்பினும் மகிந்த ராஜபக்ச பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித மாற்றமும் இல்லை, அவர் போட்டியிடுவது உறுதி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.