ஷிரந்தி ராஜபக்ச மற்றும் புஷ்பா ராஜபக்ச வங்கி கணக்குகள் முடக்கம் !!!
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ச மற்றும் முன்னாள்அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்ச ஆகியோர் நடத்...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_163.html
ஷிரந்தி ராஜபக்ச நடத்தி வந்த சிவில் லிய சவிய நிதியத்தின் 103.8 மில்லியன் ரூபாவும் புஷ்பா ராஜபக்ச நடத்திய நிறுவனத்தின் 43 லட்சம் ரூபாவும் இந்த வங்கி கணக்குகளில் உள்ளன.
குறித்த வங்கி கணக்குகளில் காணப்படும் சந்தேகம் காரணமாக தற்போது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதுடன் கொழும்பு கோட்டை நீதவானின் உத்தரவின் பேரில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
ஷிரந்தி மற்றும் புஷ்பா ராஜபக்ச ஆகியோரிடம் நிதி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு விரைவில் விசாரணைகளை நடத்தவுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் வைத்திருக்கும் வங்கி கணக்கை ஆரம்பிக்க போலியான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன.
இதனை தவிர ஷரந்தி ராஜபக்ச நடத்தி வரும் கால்டன் முன்பள்ளிகள் மூலம் முறைகேடாக பணம் சம்பாதிக்கப்படுவதாக ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருந்தன.


Sri Lanka Rupee Exchange Rate