அப்போது அவரிடம், இஸ்லாமியராக மாறிய பிறகும் பெயரை மாற்றிக் கொள்ளாதது ஏன் என்று கேட்டனர்.
யுவன் மீது கடந்த சில நாட்களாகவே சர்ச்சையான விஷயங்கள் திணிக்கப்படுகிறது. இந்நிலையில் இவரின் நெல்லை இசை கச்சேரியின் பத்திரிக்கையாளர் சந்திப...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_945.html
யுவன் மீது கடந்த சில நாட்களாகவே சர்ச்சையான விஷயங்கள் திணிக்கப்படுகிறது. இந்நிலையில் இவரின் நெல்லை இசை கச்சேரியின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது அவரிடம், இஸ்லாமியராக மாறிய பிறகும் பெயரை மாற்றிக் கொள்ளாதது ஏன் என்று கேட்டனர். அதற்கு பதிலளித்த யுவன், "நான் சினிமாவுக்கு வரும்போதே யுவன்சங்கர்ராஜா என்ற பெயரில்தான் அறிமுகமானேன். அந்தப் பெயர்தான் ரசிகர்களுக்கும் தெரியும். புதிதாக பெயர் சூட்டிக்கொண்டால் அந்த பெயரை ரசிகர்கள் ஏற்று கொள்வார்களா? என்பது சந்தேகம்தான். அதனால் தான் பெயரை மாற்றவில்லை," என்றார்.
உங்களுடைய 3-வது திருமணத்தில் உங்களின் தந்தை இளையராஜா கலந்துகொள்ளவில்லையே? உங்களின் திருமணத்தை அவர் ஏற்றுக்கொண்டாரா? அல்லது எதிர்ப்பு தெரிவித்தாரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த யுவன், "எதிர்க்கவில்லை. ஊடகங்கள் குறிப்பிட்டப்படி, அது ரகசிய திருமணம் அல்ல. என் குடும்பத்தினர் அனைவருக்கும் முன்பே தெரியும். அப்பாவிடம் தெரிவித்தபோது உனக்கு எது சந்தோஷமோ அதை செய் என்று அனுமதி கொடுத்தார். என் குடும்பத்தினர் அனைவரும் அந்த திருமணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
பெண் வீட்டாருக்கு சில சங்கடங்கள் ஏற்பட்டதால் உடனடியாக திருமணத்தை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. அப்பாவை சந்தித்து திருமணத்துக்கு அழைத்தபோது, எப்போது திருமணம்? என்று கேட்டார். 2 நாளில் திருமணத்தை நடத்தவேண்டிய சூழ்நிலை பற்றி அவரிடம் விளக்கினேன். நேரம் கிடைக்காத காரணத்தால் அப்பா என் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. திருமணத்தை முடித்த மறுநாளே அப்பாவிடம் சென்று, ஆசி பெற்றேன்," என்றார்
இதில் தமன் விரும்பி கேட்டதால் தான் ஒரு பாடலுக்கு மட்டும் அவர் இசைக்கோர்ப்பு செய்தார். மற்றபடி நான் தான் மாஸ் படத்திற்கு பின்னணி இசையமைக்கிறேன்.
மேலும், என் அப்பா 1000 படங்களுக்கு இசையமைத்துள்ளார், அவருக்கு இந்த திரையுலகம் ஒரு விழாவும் எடுக்காமல் இருப்பது கொஞ்சம் வருத்தம் தான் என கூறியுள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate