பாகிஸ்தானில் தலிபான்கள் கொன்று குவிப்பு!!
பாகிஸ்தானின் திரா பள்ளத்தாக்கு பகுதியில் தலிபான்களுக்கு எதிரான போரில் ராணுவம் முன்னேறி வருகிறது. தலிபான்கள் வசமிருந்த முக்கிய பகுதியை ராணு...


பாகிஸ்தானில் ஜனநாயக அரசை வீழ்த்தி விட்டு கடுமையான இஸ்லாமிய ஆட்சியை அமல்படுத்தும் நோக்கில், தெக்ரிக்–இ–தலீபான் (பாகிஸ்தான் தலீபான்) அமைப்பு போராடி வருகிறது. ஆப்கானிஸ்தான் தலீபான் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, பாகிஸ்தானின் வடமேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லையோர பகுதியான வஜிரிஸ்தான் உள்ளிட்ட மண்டலங்களில் தளங்களை அமைத்து செயல்பட்டு வருகிறது.
தெற்கு வஜிரிஸ்தான் மற்றும் கைபர் மண்டலங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பெஷாவர் ராணுவப்பள்ளில் தலிபான் தீவிரவாதிகள் கடந்த டிசம்பர் மாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில், 140-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் உட்பட 150 பேர் பலியாயினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் மீதான தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தானின் பெஷாவர் நகருக்கு மேற்கே கைபர் மண்டலத்துக்கு உட்பட்ட திரா பள்ளத்தாக்கில் தீவிரவாதிகளின் ஏராளமான முகாம்கள் உள்ள பகுதியை குறி வைத்து கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன. இதற்கு தீவிரவாதிகளும் பதிலடி கொடுத்து வருவதால், அப்பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் சண்டை நடந்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவத்தின் இந்த அதிரடி தாக்குதலில் 80 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், சுமார் 100 பேர் காயமடைந்தனர்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும் தெக்ரிக்–இ–தலீபான் மற்றும் அதனுடன் தொடர்புடைய லஷ்கர்–இ–இஸ்லாம் அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதைப்போல தெற்கு வஜிரிஸ்தான் மண்டலத்திலும் ராணுவ தாக்குதல் நடந்து வருவதாகவும் உளவுத்தகவல்கள் வெளியாகியது. இந்த பகுதியில் மறைந்திருக்கும் அனைத்து தீவிரவாதிகளையும் ஒழிக்கும் வரை முழுவீச்சில் தாக்குதல் தொடரும் என பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. பாகிஸ்தான் ராணுவம் - தீவிரவாதிகள் இடையே நேற்று திரா பள்ளத்தாக்கில் நடைபெற்ற சண்டையில் 11 தீவிரவாதிகள் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மாஸாதால் பகுதியை கைப்பற்றிய ராணுவம் திரா பள்ளத்தாக்கு பகுதியில் தீவிரவாதிகளை வீழ்த்தி முன்னேறி வருகிறது என்று அரசுதரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. தூர் தாரா, சன்தானா, கைபர் சுங்கார் பகுதியில் ராணுவம் முன்னேறி வருகிறது. விரையில் தீவிரவாதிகளை ஒழித்து அப்பகுதியை ராணுவம் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராணுவம் ஹெலிகாப்டர்கள் மூலம் தீவிரவாதிகளின் கூடாரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. தீவிரவாதிகள் மீதான பிடி மிகவும் இறுகியுள்ளது