44 வருடங்களில் 40 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை திருடிய பெண்!
கடைகளில் பொருட்களை திருடியவர்கள் பற்றிய செய்திகள் புதியவையல்ல. ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் கடைகளில் திருடுவதை...

![]()
கடைகளில் பொருட்களை திருடியவர்கள் பற்றிய செய்திகள் புதியவையல்ல. ஆனால், பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர் கடைகளில் திருடுவதையே பல தசாப்தங்களாக தனது தொழிலாக மேற்கொண்டு வந்துள்ளார். 54 வயதான கிம் பெரி எனும் இப்பெண் கடைகளில் திருடிய பொருட்களின் மதிப்பு சுமார் 20 லட்சம் ஸ்ரேலிங் பவுண்கள் (சுமார் 40 கோடி ரூபா) எனத் தெரிவிக்கப்படுகிறது. 9 வயதில் திருட ஆரம்பித்த கிம் பெரி, 44 வருடங்களாக திருட்டுகளில் ஈடுபட்டு சிறைச்சாலைக்கும் பல தடவை சென்றுள்ளார். தனது 6 பிள்ளைகளில் சிலரையும் திருடுவதற்கு பழக்கப் படுத்திய அவர், 14 வயதான தனது கடைசி மகளுக்காக திருடுவதை கைவிட்டுள்ளாராம்.
|
9 வயதான போது வீட்டில் உணவு இல்லாத நிலையில் கடையில் திருட ஆரம்பித்தாராம் கிம் பெரி. பின்னர் உணவுப் பொருட்களை மாத்திரமல்லாமல் ஆடம்பர பொருட்களையும் அவர் திருட ஆரம்பித்துள்ளார். இது குறித்து கிம் பெரி கூறுகையில், "எனக்கு 54 வயதாகிறது. 44 வருடங்களாக திருட்டில் ஈடுபட்டேன். இதில் எனது ஆறு குழந்தைகளையும் ஈடுபடுத்தியுள்ளேன், 50 இற்கு மேற்பட்ட தடவை திருடும் போது பிடிபட்டு 7 தடவைக்கு மேல் சிறை சென்றுள்ளேன்.
40 வருடங்களுக்கும் மேலாக ஆடம்பரமாக வாழ்ந்திருக்கிறேன். வாரத்தில் 4 நாட்கள் ஐந்து நட்சத்திர விடுதியில் சாப்பிடுவேன். எங்கு போனாலும் டெக்ஸியில்தான் போவேன். நான் சிறையில் இருந்தபோது எனது மூத்த பிள்ளைகள் மூவரும் எனது தந்தையுடனும் அவரின் காதலியுடனும் வசிக்கச் சென்றுவிட்டனர். 14 வயதான எனது கடைசி மகளுக்காக கடந்த சில வாரங்களாக எதையும் திருடவில்லை. எனது குற்றங்களுக்காக அவள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காக திருடுவதை நிறுத்துவதற்கு நான் விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
|