யோசித்த ராஜபக்சவிடம் குற்றத் தடுப்பு பிரிவினர் விசாரணை!
நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலைய களஞ்சிய அறையொன்றில் இருந்து இருவர் பயணம் செய்யும் சிறிய ரக விமானம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் யோச...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_68.html
நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலைய களஞ்சிய அறையொன்றில் இருந்து இருவர் பயணம் செய்யும் சிறிய ரக விமானம் ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பில் யோசித்த ராஜபக்ச குற்றத் தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ச இன்று வாக்குமூலத்தை வழங்கியுள்ளார்.
![]() |
நாரஹென்பிட்டி பொருளாதார மத்திய நிலைய களஞ்சிய அறையிலிருந்து இரண்டு பேர் செல்லக்கூடிய விமானம் ஒன்று கடந்த ஜனவரி மாதம் மீட்கப்பட்டது. எனினும் அந்த விமானத்திற்கு திரைப்பட இயக்குநர் ஒருவர் உரிமை கோரியிருந்தார். இந்தநிலையில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். அதற்கமைய இன்று தனது சகோதரரும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்சவுடன் சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த நாமல், யோஷித்த குற்றமற்றவர் என்பதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம். நாம் குற்றமற்றவர்கள். அதனாலேயே, பொலிஸ் அழைப்பு கிடைத்தவுடன் வந்தோம் என்றார்.
இதன்போது, எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச போட்டியிடுவாரா?' என்று ஊடகவியலாளர் ஒருவர், நாமலிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதுபற்றி அப்பாவிடமே கேட்டுக்கொள்ளுங்கள் என ஊடகவியலாளர்களிடம் பதிலளித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
![]() |
.jpg)
.jpg)


Sri Lanka Rupee Exchange Rate