பர்மா முஸ்லிம்களின் துயர் துடைக்க ரூ 350 கோடியை மன்னர் சல்மான் வாரி வழங்கினார்….!!
இரு புனித பள்ளியின் சேவகரும், உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி அரேபியாவின் சக்கரவர்த்தியுமான மன்னர் சல்மான...

http://kandyskynews.blogspot.com/2015/03/350.html

உலகமே உற்று நோக்கி கொண்டிருக்கும் சர்வதேச சாம்ராஜ்ஜியமான சவூதி
அரேபியாவின் சக்கரவர்த்தியுமான மன்னர் சல்மான் அவர்கள் பர்மாவில்
வசிக்கும் முஸ்லிம்களின் துயர் துடைப்பதற்காக ரூ. 400 கோடியை வாரி
வழங்கியுள்ளார்.
பர்மாவில் ஆட்சி புரியும் புத்த
பயங்கரவாதிகளால் அங்குள்ள முஸ்லிம்கள் கடுமையான துன்பங்களுக்கு உள்ளாகி
வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை
கொன்று குவித்து லட்சக்கணக்கான முஸ்லிம்களை அகதிகளாயினர்.
அவ்வளவு அநியாயத்திற்கும் அந்நாட்டு அரசு வேடிக்கையே பார்த்தது.
அப்பொழுது சவூதி அரேபியாவில் அரபு நாட்டு தலைவர்கள் ஒன்றிணைந்து
பர்மாவுக்கு எதிராக தீர்மானம்
நிறைவேற்றி பர்மா அரசுக்கு கடும்
நெருக்கடியை கொடுத்த பின்னரே
கலவரத்தை பர்மா அரசு கட்டுக்குள்
கொண்டு வந்தது.
துருக்கி அதிபர் எர்துகானின் மனைவி
நேரடியாக பர்மாவுக்கு சென்று
பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.
இந்நிலையில் சவூதி அரேபியாவின் மன்னராக ஆட்சி பொறுப்பு ஏற்ற மன்னர்
சல்மான் ரூ 350 கோடியை பர்மா முஸ்லிம்களுக்கு வழங்கியுள்ளார்.
இந் நிதியை சவூதி மனித உரிமை அமைப்பிடம் ஒப்படைத்துள்ளது. இந்த தொகையை முறையாக
பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒப்படைத்து அதற்கான முழு விபரத்தையும் சவூதி
அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று
உத்தரவும் போட்டுள்ளார்.
இவ்வுலகில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராக மனித உரிமைகள் மீறப்படும்
போது கொதித்து எழுகின்ற சர்வதேச
சமூகமும், மனித உரிமை அமைப்புகளும்முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமைகள்
மீறப்படும் போது அமைதியாகி விடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுப்போன்ற சங்கடமான சூழ்நிலையில் சவூதி அரேபியாவின் உதவி பாதிக்கப்பட்ட
மக்களுக்கு பெரும் நிவாரணியாக இருக்கிறது.
ஏக இறைவன் சவூதி அரேபியாவுக்கு
மென்மேலும் தனது அருள் மழையை
பொழிவானாக…