13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான மோடியின் கருத்தை ஏற்கமுடியாது
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கூறினார் என்பதற்காக அதனை நடைமுறைப்படுத்த வ...
http://kandyskynews.blogspot.com/2015/03/13.html
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கூறினார் என்பதற்காக அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கு இல்லை.
வெளிநாட்டுத் தலைவர்கள் கூறுவதை எல்லாம் இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்ர்க்க முடியாது. இவ்வாறு வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாட்டுத் தலைவர்கள் இலங் கைக்கு வரும்போது தாங்கள் உணர்வதைக் கூறலாம். ஆனால் எதைச் செய்ய வேண்டும், எதனை செய்யக் கூடாது என்று தீர்மானிக்கும் பொறுப்பு இலங்கை அரசுக்கே உள்ளது. என்று அவர் தெரிவித் துள்ளார். வெளிநாட்டு தலைவர் ஒருவர் கூறிவிட்டார் என்பதற்காக எதையும் செய்துவிட முடியாது.
வெளி நாட்டுத் தலைவர் கூறிவிட்டார் என்பதற்காக நாங்கள் எதனையும் செய்யவேண்டும் என்ற கட்டாய மும் இல்லை. இந்த நிலையில் நாங்கள் அது குறித்து ஆராய்ந்தே நடவடிக்கை எடுப்போம். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Sri Lanka Rupee Exchange Rate