அமெரிக்காவின் தாக்குதலை முறியடித்து அல் பாக்தாதி நகரை ISIS கைப்பற்றியுள்ளது
ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கடந்த ஆ...
http://kandyskynews.blogspot.com/2015/02/isis_16.html

ஈராக்கிலும், சிரியாவிலும் ஐ.எஸ். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக அமெரிக்காவும், அதன் நேச நாடுகளும் கடந்த ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி முதல் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகின்றன. ஆனாலும் isis தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.
ஐ.எஸ். மீது குறிப்பிட்ட அளவுக்கு தரை வழி தாக்குதல் நடத்தவும் அதிகாரம் வழங்குமாறு கேட்டு அமெரிக்க பாராளுமன்றத்துக்கு ஜனாதிபதி ஒபாமா தீர்மானம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இந்த நிலையில், ஈராக் நாட்டில் உள்ள அல் பாக்தாதி நகரை ஐ.எஸ். பிடித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நகரம், அன்பார் மாகாணத்தில், உள்ளது. அமெரிக்காவின் விமானப்படை தளம் அமைந்துள்ள அல் ஆசாத் நகருக்கு அருகே உள்ளது. இங்கு ஈராக் அரசு படைகளுக்கு அமெரிக்க கடற்படையினர் 300 பேர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஈராக் படையினருடன் கடுமையாக சண்டையிட்டு, அல் பாக்தாதி நகரை ஐ.எஸ். கைப்பற்றினர்.
இதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் பென்டகன் செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் ஜான் கிர்பை கூறியதாவது:-
அல் பாக்தாதி நகரில் கடந்த சில நாட்களாகவே ஐ.எஸ். ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இப்போது அந்த நகரை அவர்கள் முழுமையாக கைப்பற்றி விட்டனர்.
சண்டை நடந்த இடத்தில் அமெரிக்க படையினர் இல்லை. இப்போது ஈராக் அரசிடம் இருந்து வந்த அல் பாக்தாதி நகர் ஐ.எஸ்.களிடம் வீழ்ந்து விட்ட காரணத்தால், ஒட்டுமொத்த தீவிரவாத எதிர்ப்பு யுத்தத்தில் எந்த பின்னடைவும் கிடையாது.
கடந்த 2 மாதங்களில் இது முதல் சம்பவம்தான். நாம் இன்னும் வீழ்த்தப்பட வேண்டிய பகைவர்கள்தான் ஐ.எஸ். . ஒரு நகரம் மட்டும் தான் வீழ்ந்திருக்கிறது. அன்பார் மாகாணம் முழுமையாக அல்ல. ஈராக்கும் முழுமையாக வீழ்ந்து விடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.


Sri Lanka Rupee Exchange Rate