ரணில் இனவாதத்தை தூண்டும் வகையில் எந்த பத்திரிகை செயல்பட்டாலும் அந்த பத்திகை அலுவலகத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்யுமாறும் ,சிங்கள...
ரணில் இனவாதத்தை தூண்டும் வகையில் எந்த பத்திரிகை செயல்பட்டாலும் அந்த பத்திகை அலுவலகத்தை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்யுமாறும் ,சிங்கள பத்திரிக்கைகள் இனவாதத்தை தூண்டும் வகையில் செயல்பட்டுவருவதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
சில உள்நாட்டு ஊடகங்கள் இனங்களுக்கு இடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ள பிரதமர் இது தொடர்பில் ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை அழைத்து எச்சரிக்கை விடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திர அமைப்புக்களும் இந்த சந்திப்பின் போது அழைக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிச் செயற்பாடுகள் இடம்பெறும் என்ற அர்த்தத்தில் சில சிங்கள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். சில சிங்கள பத்திரிகைகள் அதைப் பிரிக்கின்றார்கள், இதைக் கொடுக்க போகின்றார்கள் என செய்தியை வெளியிட்டதாவும், கடந்த 10 வருடங்களாக தன்னை அழித்து, அரசியலில் இருந்து வெளியேற்ற முயற்சி செய்ததாகவும் ஆனால் அவர்களால் அதை முடியாமல் போனதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு ஆதரவளித்த சில பத்திரிகை நிறுவன உரிமையாளர்கள் புதிய அரசாங்கத்தை அவதூறு செய்ய முயற்சிப்பதாகக் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஊடக நிறுவங்களின் தலைவர்கள் பெரும் வர்த்தகர்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.சிங்கள மக்கள் வாழும் பிரதேசம் ஒன்றில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்