லிபியாவில் இஸ்லாமிய அரசு மீது எகிப்து வான் தாக்குதல்
எகிப்திய கொப்டிக் கிறிஸ்தவர்களை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் கொலை செய்ததை அடுத்து, அருகில் லிபியாவில் ஜிகாதிகள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தி...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_932.html
எகிப்திய கொப்டிக் கிறிஸ்தவர்களை இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் கொலை செய்ததை அடுத்து, அருகில் லிபியாவில் ஜிகாதிகள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தியதாக எகிப்து கூறியுள்ளது.

கொப்டிக் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலை அடுத்து எகிப்து பதிலடி
கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு நகரான ”டெர்னா” தாக்குதலுக்கு உள்ளானதாக நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
குறைந்தபட்சம் 10 கொப்டிக் கிறிஸ்தவர்களாவது தலை வெட்டிகொலை செய்யப்பட்டதாக காண்பிக்கும், வீடியோ ஒன்று ஞாயிறன்று வெளியானதை அடுத்து, பதில் நடவடிக்கை எடுப்போம் என்று எகிப்திய அதிபர் அப்தல் ஃபத்தா அல் சிசி மிரட்டியிருந்தார்.
இந்த கிறிஸ்தவர்கள் பல வாரங்களுக்கு முன்னதாக லிபியாவில் கடத்தப்பட்டிருந்தார்கள்.
எகிப்திய இராணுவத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், ”எகிப்தியர்களுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் உள்ளது, அது அவர்களை பாதுகாக்கும் என்று அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.


Sri Lanka Rupee Exchange Rate