வடக்கு அரசியல்வாதிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சர்வதேச புலி ஆதரவு அமைப்புக்களை திருப்திப்படுத்தவுமே புதிய அரசாங்கம் போர்க்குற்ற விச...

வடக்கு அரசியல்வாதிகளின் தேவையைப் பூர்த்தி செய்யவும் சர்வதேச புலி ஆதரவு அமைப்புக்களை திருப்திப்படுத்தவுமே புதிய அரசாங்கம் போர்க்குற்ற விசாரணைகளை பலப்படுத்துவதாகவும், எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் இராணுவத்தினரையும் தண்டிக்க புதிய அரசு தீர்மானித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா.
விடுதலைப்புலி பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் மனித உரிமை மீறலாகாது. இலங்கையில் இடம்பெற்றது சிறுபான்மை மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அல்ல. முப்பது வருட காலம் இந்த நாட்டின் ஒற்றுமையினை சீரழித்த பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டமாகும். இதில் தமிழ், முஸ்லிம் சமூகம் முழுமையாகப் பாதுகாக்கப்பட்டதுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.