தாக்குதலை நிறுத்தியது சவுதி அரேபியா
ஏமனில் மேற்கொள்ளப்பட்டு வந்த தமது இராணவ நடவடிக்கை இடைநிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. அவுதி அரேபிய அரச வானொலி ...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_212.html

ஏமனில் மேற்கொள்ளப்பட்டு வந்த தமது இராணவ நடவடிக்கை இடைநிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
அவுதி அரேபிய அரச வானொலி நேற்று இந்த அறிவிப்பை விடுத்தது.
ஏமனில் இடம்பெற்ற உள்நாட்டு மோதலை அடுத்து, ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதியில் இருந்து, சவுதி அரேபிய இராணுவத்தினர் தாக்குதலை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், கடந்த மூன்று வாரமாக மேற்கொள்ளப்பட்ட தமது தாக்குதலை நிறுத்துவதாக சவுதி அறிவித்துள்ளது.
ஏமனில் தற்போது சுமூக நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்தே இராணுவ தாக்குதல்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சவுதி அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate