மொசூல் நகரை மீட்க இராக் படையினர் திட்டம்- பிரதமர் அல் அபாதி
இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மொசுல் நகரை மீட்கத் திட்டம் இஸ்லாமிய அரசின் கட்டுப்பட்டில் உள்ள இராக்கின் வடக்...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_597.html

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மொசுல் நகரை மீட்கத் திட்டம்
இஸ்லாமிய அரசின் கட்டுப்பட்டில் உள்ள இராக்கின் வடக்கு நகரமான மொசூலை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட இராக்கிய அரச படையினர் திட்டமிடுவதாக இராக்கின் பிரதமர் ஹைதர் அல்-அபாதி தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச உயிர் சேதத்துடன் அடுத்த சில மாதங்களில் மொசூல் நகரம் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் என்று தான் நம்புவதாக கடந்த செப்டம்பர் மாதம் பிரதமராக பதவியேற்ற அபாதி பிபிசிக்கு அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழும் இராக்கின் மூன்றாவது பெரிய நகரமான மொசூல், கடந்த ஜூன் மாதம் இஸ்லாமிய அரசால் கைப்பற்றப்பட்டது. மொசூல் நகரை மீட்கும் திட்டத்திற்கு, அமெரிக்க தலைமையிலான கூட்டணி படை மற்றும் குர்திய படைகளின் ஆதரவும் தேவை என்றும் பிரதமர் அபாதி தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate