ஐ.நா நிகழ்ச்சி நிரலில் போர்க்குற்ற அறிக்கை! – தோல்வி காணும் நி்லையில் இலங்கையின் இராஜதந்திரம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காமல், காலஅவகாசம் வழங்குமாறு இலங்கை அரசு கோரி...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_248.html

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 28வது கூட்டத்தொடரில் போர்க்குற்ற விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்காமல், காலஅவகாசம் வழங்குமாறு இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ள போதிலும், மேற்படி அறிக்கை சமர்ப்பிப்பது குறித்த விடயம் பேரவையின் நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளக விசாரணைப் பொறி முறை ஒன்றை உருவாக்க உள்ளதாகவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்த கால அவகாசம் வழங்குமாறும் புதிய அரசு சர்வதேச சமூகத்திடம் கோரி வருகின்றது. இதற்காக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தொடர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகின்றார். இலங்கை மீதான விசாரணை அறிக்கையை பிற்போடுவதே புதிய அரசின் பிரதான நோக்கமாக உள்ளது.
எனினும்,மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய நடத்தப்பட்ட விசாரணைகளின் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பது குறித்த விடயம் இன்னமும் இம்முறை அமர்வுகளின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது முக்கிய விடயமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் சமூகம் ஆகியனவும் அறிக்கை தாமதமாகாது சமர்ப்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Sri Lanka Rupee Exchange Rate