இனிமேலும் பொதுபலசேனா வந்தால் அவர்களைப் பிடித்து நாய்க் கூண்டில் அடைப்போம் –சந்திரிக்கா.

தேர்தலின் போது, மைத்ரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டில் முஸ்லிம், தமிழ் உட்பட அனைத்து இன மக்களுக்கும் தத்தமது உரிமைகளை முழுமையாகப...

ecf98-bodhubala-senaதேர்தலின் போது, மைத்ரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்தால், இந்த நாட்டில் முஸ்லிம், தமிழ் உட்பட அனைத்து இன மக்களுக்கும் தத்தமது உரிமைகளை முழுமையாகப் பெற்று, சுதந்திரமாக, பயம் இல்லாமல், வாழ முடியும் என்று உறுதியளித்திருந்தோம். அதை நாம் தற்பொழுது ஏற்படுத்தி இருக்கிறோம்.


இதன் பின்னர் உங்களைத் தாக்க பொதுபல சேனாவோ, வேறு பலு சேனாக்களோ முன்வராது. அப்படி வந்தால் நாம் அவர்களை பிடித்து நாய் கூண்டில் அடைப்போம். இதன் பின்னரும் இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த இடம் கொடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்ரடாநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

நேற்று திஹாரி ஊர்மனை சந்தியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நாட்டின் முஸ்லிம் பிரதேசங்களில் 98 சத வீத வாக்குகள் மைத்திரி ஆட்சிக்கு கிடைத்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்ரடாநாயக குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்:

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் பாரிய பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. வாழ்வதற்கு கூட முடியாத நிலைமைகள் கடந்த இரண்டு வருடங்களுக்குள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதே போன்று எமது சிங்கள மக்களுக்கும் பல பிரச்சினைகளை ராஜபக்ஷ அரசு உருவாக்கியிருந்தது.

சுதந்திரமாக வாழ உரிமை இருக்கவில்லை, சுதந்திரமாக தமது மத உரிமைகளை முன்னெடுக்க இடம்கொடுக்கவில்லை, அதேபோன்று சிங்களவர்களுக்கும் நிம்மதியாக உண்டு குடித்து வாழ முடியவில்லை, ராஜபக்ஷவின் கொள்ளைகளால் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது, பொருட்களின் விலைகள் உயர்ந்தது, சம்பளங்களை அதிகரிக்க முடியவில்லை இது போன்ற பிரச்சினைகள் பல காணப்பட்டது.

நாம் தனியாக இந்த அரசாங்கத்தை உருவாக்கவில்லை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஒன்றிணைந்து இந்த புதிய அரசாங்கத்தை உருவாக்கினோம். அதேபோன்று இன்னும் ஒன்பது கட்சிகள், சுமார் 50 சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் போன்ற பலர் எமது பயணத்துக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

அதேபோன்று முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். மேலும் எதிர்காலத்திலும் எமது அரசாங்கத்துக்கு முஸ்லிம்களது ஒத்துழைப்பு தேவைப்படுகிறது, நாம் அதற்கான சந்தர்ப்பம் வரும்போது உங்களிடம் கூறுவோம்.

இதன் பின்னர் உங்களைத் தாக்க பொதுபல சேனாவோ, வேறு பலு சேனாக்களோ முன்வராது. அப்படி வந்தால் நாம் அவர்களை பிடித்து நாய் கூண்டில் அடைப்போம். இதன் பின்னரும் இந்த நாட்டில் பிரிவினையை ஏற்படுத்த இடம் கொடுக்க முடியாது.

இந்த அமைப்புக்களின் பின்னணியை முஸ்லிம்கள் நன்றாக இனம் கண்டு கொண்டனர், இதனால் கடந்த ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களில் 98 சத வீத வாக்குகள் மைத்திரி ஆட்சிக்கு கிடைத்தது.

தற்பொழுது ராஜபக்ஷ ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம், இதன் பின் மக்கள் மீண்டும்,ஒன்றாக, ஒற்றுமையாக வாழக்கூடிய ஒரு யுகத்தை ஏற்படுத்தியுள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டரநாயக குமாரதுங்க மேலும் தெரிவித்தார்.

Related

இலங்கை 8219107007048634831

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item