அரச ஊழியர்களுக்கான சம்பளம் 8000 ரூபாவினால் அதிகரிப்பு
2015ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு 8,000 ஆயிரம் ரூபாவாகும் என்று சிறில...

http://kandyskynews.blogspot.com/2015/02/8000.html

2015ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் அரசாங்க உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு 8,000 ஆயிரம் ரூபாவாகும் என்று சிறிலங்கா அரசாங்கத்தின் நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அனுப்பிவைத்துள்ள சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற 3,000 ரூபாய் கொடுப்பனவான மாதாந்த இடைக்கால கொடுப்பனவுக்கு மேலதிமாக 2015 பெப்ரவரி மாதத்திலிருந்து மேலதிகமாக 5,000 ரூபாவை வழங்க வேண்டும்.
அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதற்கு உத்தேசிக்கபட்ட மாதாந்தம் 10,000 ரூபாய் கொடுப்பனவிலிருந்து செலுத்த வேண்டிய எஞ்சிய தொகையான 2,000 ரூபாய், 2015ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.