நாட்டில் 5000 இற்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்
5,026 போலி வைத்தியர்கள் தொடர்பான தகவல்கள், 5 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. 22,313 வைத்திய...

5,026 போலி வைத்தியர்கள் தொடர்பான தகவல்கள், 5 மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வொன்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
22,313 வைத்தியர்களை இந்த ஆய்விற்கு உட்படுத்தியதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நவின் டி சொய்ஸா தெரிவிக்கின்றார்.
வடக்கு, மேல், தெற்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
மாகாண ரீதியாக நோக்கும்போது, வட மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான போலி வைத்தியர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஐந்து மாவட்டங்களிலும் அடையாளம் காணப்பட்டுள்ள போலி வைத்தியர்களில் 32 .5% வட மாகாணத்தில் இருப்பதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஐந்து மாவட்டங்களிலும் சராசரியாக ஐந்து வைத்தியர்களில் ஒருவர் போலியானவர் என்ற தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
போலி வைத்தியர்களை கைதுசெய்து அவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து வருட சிறைத்தண்டனையாவது விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.