இலங்கையில் மீண்டும் குடும்ப ஆட்சி தோற்றுவிக்கப்படவுள்ளதா?
தமது சகோதரர் ஹம்பாந்தோட்டையில் போட்டியிடவுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச குருநாகலில் போட்டியிடவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_177.html

தமது சகோதரர் ஹம்பாந்தோட்டையில் போட்டியிடவுள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச குருநாகலில் போட்டியிடவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் நாமல் ராஜபக்ச எங்கே போட்டியிடுவார் என்பது இன்னும் தெரியவரவில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தரப்பை கோடிட்டு ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
இதேவேளை மஹிந்த ராஜபக்ச, மாவட்ட தலைவராகவோ அல்லது தலைமை வேட்பாளராகவோ நியமிக்கப்படமாட்டார் என்ற தகவல் தற்போது மாறி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி மஹிந்த ராஜபக்ச, தாம் போட்டியிடும் குருநாகல் மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்புக்கு தலைமை தாங்குவார் என்றும் சமல் ராஜபக்ச ஹம்பாந்தோட்டைக்கு தலைமை தாங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், மஹிந்த ராஜபக்ச. நாடு முழுவதும் சென்று கூட்டமைப்பு வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்வார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.