நாவலப்பிட்டியில் 11 வயது சிறுமிக்கு பிரசவம் ; நீதிமன்றம் அனுமதி!

தனது மூத்த சகோதரியின் கணவரினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கருத்தறிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு குழந்தைப் பிரசவிக்க நீதிமன்றம் அனுமதி...

தனது மூத்த சகோதரியின் கணவரினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கருத்தறிக்கப்பட்ட 11 வயது சிறுமிக்கு குழந்தைப் பிரசவிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

11 வயது கருத்தறித்துள்ள நிலையில், அதனைக் கலைப்பது சிறுமியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் அந்தக் குழந்தையைப் பிரசவிக்க அனுமதிக்க வேண்டும் என நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையின் விசேட மருத்துவ அதிகாரி கே.எம்.மகசேன ஹட்டன் நீதிமன்ற நீதவானிடம் அனுமதி கோரியிருந்தார்.

இதிலுள்ள உளவியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கினார்.

சிறுமியின் மூத்த சகோதரியின் கணவரினால் குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்தாக காவல்துறையினரின் விசாரணைகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனைத்தவிர குறித்த சிறுமி பிரதேசத்திலுள்ள மற்றுமொரு இளைஞனினாலும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தற்போது மூன்று மாதகால கர்ப்பிணியாக இருக்கும் குறித்த சிறுமி திக்ஓய வைத்தியசாலையில் இருந்து நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அத்துடன், குறித்த சிறுமி குழந்தையொன்றைப் பெற்றெடுக்கும் அளவிற்கு உடல் பலம் கொண்டவர் இல்லையென அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது உடல் நிலை மோசமாக இருந்த போதிலும் கருவைக் கலைப்பது சிறுமியின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் குழந்தையைப் ஈன்றெடுக்க அனுமதிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது குறித்த சிறுமி நாவலப்பிட்டி மருத்துவமனையிலிருந்து கண்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு பெயர், விபரங்களை வெளியிட முடியாது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related

மாத்தறையில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழப்பு

மாத்தறை, வெலிகம – மிதிகம பகுதியில் நேற்று (07) இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். இராணுவத்தினரின் வாகனமொன்றும் முச்சக்கர வண்டியும் மோதி விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்த...

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில்

பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு அடுத்த மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக தேர்தல்க...

போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை தொடர்பில் ஐவர் கைது

போதைப்பொருள் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்ய முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் நாட்டில் சில பகுதிகளில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பமுணுகம உஸ்வெடகெசியாவ பகுதியில் ஒரு தொகை வலி நிவாரண மாத...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item