கை, காலை உடைப்பேன் என்றார்கள்: அச்சுறுத்தலை மீறி காத்தான்குடியில் அசாத் சாலி (video)
காத்தான்குடிக்கு வந்தால் கையை உடைப்பேன், காலையுடைப்பேன் என தொலைபேசியில் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் அதனை மீறி காத்தான்குடியில் மாகா...
காத்தான்குடிக்கு வந்தால் கையை உடைப்பேன், காலையுடைப்பேன் என தொலைபேசியில் தமக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டும் அதனை மீறி காத்தான்குடியில் மாகாணசபை உறுப்பினர் சிப்லி பாரூக்கினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொது வேட்பாளருக்கான பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ள மத்திய மாகாண சபை அசாத் சாலி, இது குறித்து அங்கு தெரிவித்திருந்த நேரம் பதிவு செய்யப்பட்ட காணொளி:
Video: A.Buhary
[youtube https://www.youtube.com/watch?v=28arfKUlNqo]
நிகழ்வு குறித்து செய்தியாளர் பழுலுல்லா பர்ஹான் அனுப்பி வைத்திருக்கும தகவல் குறிப்பு:
2015 ஜனாதிபதி தேர்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரீபால சிறிசேனவுக்கு ஆதரவு தெரிவித்து 02-01-2015 நேற்று வெள்ளிக்கிழமை இரவு காத்தான்குடியில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்று இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதிக்கான பிரதம ஒருங்கிணைப்பாளருமான பொறியியலாளர் சிப்லி பாரூக்கின் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரை வீதியிலுள்ள வளவு ஒன்றில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் பிரதம அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி கலந்து கொண்டார்.
இக் கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமீர் அலி,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபைர்,முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் முபீன்,முன்னாள் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மர்சூக் அஹமட்லெவ்வை,முன்னாள் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் றம்ழான் ,பெரும் திரளான பொது மக்கள் ,கட்சி ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு 2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரீபால சிறிசேனவுக்கு ஏன் ஆதரவு வழங்க வேண்டுமென்பது தொடர்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆஸாத் சாலி விஷேட உரை நிகழ்த்தினார்.