ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமான சொகுசு வாகனங்கள் எங்கே: சி.ஐ.டி விசாரணை ஆரம்பம்
கடந்த ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமாக இருந்த பல கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்கள் மாயமாகியுள்ளதாகவும் அவற்றைத் தேடும பணிகள் மு...

கடந்த ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்துக்கு சொந்தமாக இருந்த பல கோடி ரூபா பெறுமதியான சொகுசு வாகனங்கள் மாயமாகியுள்ளதாகவும் அவற்றைத் தேடும பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது புலனாய்வுப் பிரிவு.
சில வாகனங்களின் உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் தமக்குக் கிடைக்கப்பெற்ற தகவல் அடிப்படையிலேயே இவ்விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் இது குறித்து ஜனாதிபதி செயலாளர் பொலிஸ் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாகனங்களின் பெயரில் ஜனாதிபதி செயலகத்தில் நாளொன்றுக்கு 25 முதல் 35 லட்ச ரூபா வரையான எரிபொருள் செலவு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.